
காரில் செல்லும்போது தடையில்லா இன்டநெட் வசதியை பெறுவதற்கான புதிய
வைஃபை சாதனத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக இந்தூர் நகரில் இந்த புதிய சாதனம் சோதனை முறையில்
தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தூர் சரக பிஎஸ்என்எல்
பொதுமேலாளர் ஜிசி.பாண்டே காரில் இதற்கான வைஃபை சாதனம் பொருத்தப்பட்டு
தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வைஃபை சாதனத்தை காரில் பொருத்துவற்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை
செலவாகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. காரில் பொருத்தப்பட்டிருக்கும்
சிடிஎம்ஏ தொழில்நுட்பம் கொண்ட சாதனம் ஆன்டெனா மூலம் சிக்னல்களை பெற்று
இணைய வசதியை வழங்கும்.
காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே 3.5 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய
வசதியை பெறலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த வைஃபை
சாதனத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more at: http://tamil.drivespark.com/four-wheelers/bsnl-introduces-wi-fi-module-cars-004236.html