Saturday, April 6, 2013

காரில் இன்டர்நெட் வசதியை பெறுவதற்கான புதிய வைஃபை சாதனம்: பிஎஸ்என்எல் அறிமுகம்

Bsnl Introduces Wi Fi Module Cars
காரில் செல்லும்போது தடையில்லா இன்டநெட் வசதியை பெறுவதற்கான புதிய வைஃபை சாதனத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்தூர் நகரில் இந்த புதிய சாதனம் சோதனை முறையில் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தூர் சரக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஜிசி.பாண்டே காரில் இதற்கான வைஃபை சாதனம் பொருத்தப்பட்டு தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த வைஃபை சாதனத்தை காரில் பொருத்துவற்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை செலவாகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. காரில் பொருத்தப்பட்டிருக்கும் சிடிஎம்ஏ தொழில்நுட்பம் கொண்ட சாதனம் ஆன்டெனா மூலம் சிக்னல்களை பெற்று இணைய வசதியை வழங்கும். காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே 3.5 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதியை பெறலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த வைஃபை சாதனத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.drivespark.com/four-wheelers/bsnl-introduces-wi-fi-module-cars-004236.html

Thursday, March 28, 2013

விரைவில் சமந்தாவுடன் திருமணம்! - ஒருவழியாக ஒப்புக் கொண்ட சித்தார்த்


Sidahrd Talks About His Marriage With Samantha
சென்னை: விரைவில் சமந்தாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகர் சித்தார்த் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும், சமந்தா பேசி சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விட்டார். அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவிட, ரகசியம் அம்பலமாகிவிட்டது. முதலில் இந்த செய்தியை மறுத்த சித்தார்த் இப்போது, ஆமாம், அதற்கென்ன இப்போது... அது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி வருகிறார். லேட்டஸ்ட் தகவல்படி சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார் சித்தார்த். சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டார். திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சொல்லி வருகிறார் சித்தார்த்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/sidahrd-talks-about-his-marriage-with-samantha-172346.html

என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா

Ilayarajaa


சென்னை: வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா. ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை. ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை. அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான். இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார். "விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ? என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்? எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை. நெத்தியடி பதில்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/ilayarajaa-speaks-on-not-working-rajini-kamal-172360.html