
சென்னை: விரைவில் சமந்தாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகர்
சித்தார்த் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு
படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல்
மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால்
திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும்,
சமந்தா பேசி சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விட்டார்.
அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி
கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். இது தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பாகிவிட, ரகசியம் அம்பலமாகிவிட்டது. முதலில் இந்த செய்தியை மறுத்த
சித்தார்த் இப்போது, ஆமாம், அதற்கென்ன இப்போது... அது எங்கள் தனிப்பட்ட
விஷயம் என்று கூறி வருகிறார்.
லேட்டஸ்ட் தகவல்படி சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார் சித்தார்த். சமந்தாவும் புதிய
படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டார்.
திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை
சொல்லி வருகிறார் சித்தார்த்.
Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/sidahrd-talks-about-his-marriage-with-samantha-172346.html
No comments:
Post a Comment