Tuesday, February 28, 2012

Cricket


 


ஹோபார்ட் : இன்றைய முத்தரப்பு போட்டியில் போனஸ் புள்ளியுடன் இந்திய அணி வெற்றி பெற்றதால், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இன்னும் அடுத்த கட்டம் ஆஸியுடன் நடக்கும் போட்டியில் இலங்கை தோற்றால் இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல முடியும்.
இன்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி , இந்தியாவுக்கு 321 ரன் இலக்கு நிர்ணயித்தது. 40 ஓவருக்குள் 321 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், சேவக் மற்றும் சச்சின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இந்திய அணி 37 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கோஹ்லி அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.












சச்சின் 102 சதம் அடிப்பார் என்கிறார் கேரள ஜோதிடர் : நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் 100 அல்ல 102 சதம் அடிப்பார் என்றும், ஜோதிட கணக்குப்படி அவரது எதிர்காலம் மிக சிறப்பாக இருப்பதாகவும் கேரள மாநில பிரபல ஜோதிடர் தாமோதரன் கூறியுள்ளார். சச்சின் 100 சதம் அடிப்பாரா , இவர் எப்போது ஓய்வு பெற போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் இந்த  வேளையில் சச்சின் ரசிகர்களுக்கு இந்த ஜோதிடம் சற்று திருப்தியை அளிக்கும் . பிரபல ஜோதிடர் தாமோதரன் கேரள மாநில அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் இவர் முழு நேர ஜோதிடராக மாறினார். இந்நிலையில் இவர் சச்சின் நிலை குறித்து ஆரூடம் கணித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சச்சின்வரவிருக்கும் நாட்களில் பலம் வாய்ந்தவராக இருப்பார். அவர் அவசரப்பட்டு ராஜினாமா முடிவு எதனையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வரவிருக்கும் அவரது பிறந்தநாள் ஏப்., 24 2012 மற்றும் 2013 மிக சிறப்பாக அமையும். இந்நாளில் அவர் மீண்டும் ஆற்றல் பெற்றவராக திகழ்வார்.  

பிறந்த தேதி ராசி தெரியுமா ? இவருக்கு வரும் பிறந்த நாளுடன் 39 வயதை தொடுகிறார். இந்த வயதை கூட்டுகையில் 3 எண் வருகிறது. இந்த 39 என்பது ( 3 + 9 = 12 , 1+2 = 3 ). இந்த 3 ம் எண் இவருக்கு முழு ராசியான எண் ஆகும். இந்த காலம் வரும் போது அவர் 102 சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 102 ஐ பொறுத்தவரை கூட்டினால் 1+0+2 =3 வருகிறது.
இவர் பிறந்த தேதியை பொறுத்தவரையில் , ஏப்., 24 , 1973, இந்த எண்களை பொறுத்தவரை 2+4 = 6. இந்த 6ம் எண் அவருக்கு ராசியான எண் ஆகும். இவரது டெஸ்ட் அறிமுகம் கடந்த நவ. 15 , 1989 ல் நிகழ்ந்தது, 15 என்பது 1 +5 = 6 . எனவே வரும் 2 பிறந்த நாள் கொண்டாடி முடிப்பதற்குள் சச்சின் 102 சதம் அடித்து சாதனை நிகழ்த்தி இருப்பார் என்றார் ஜோதிடர் உறுதியாக., !

ஜோதிடர் தாமோதரன் கடந்த தேர்தலின்போது கேரளாவில் உம்ன்சாண்டி முதல்வராக வருவார் , மம்தா. ஜெ., ஆகியோர் கரம் வலுப்பெறும் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக 2011 ல் இந்திய உலக கோப்பை பெறும் என்றும் கணித்து சொல்லியிருந்தார். இவை எல்லாம் பலித்ததது. சமீப காலமாக 2007 முதல் சச்சின் மற்றும் தோனி குறித்து பிளாகுகளில் எழுதி வருகிறார்.
இன்றைய முத்தரப்பு போட்டியில் சச்சின் 30 ரன்கள் ‌எடுத்த நிலையில் அவுட்டானார். கடந்த போட்டியில் 14 ரன் எடுத்தார்.

Friday, February 24, 2012

முக்கியமான விஞ்ஞானி ராஜினாமா




புதுடில்லி: இஸ்ரோவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியது தமக்கு பெரும் அவமானமாக கருதுவதாக கூறி இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரோ மூலம் விற்கப்படும் எஸ்பாண்ட் அலைக்கற்றை தொடர்பான ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வந்ததன. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக பலக்ககட் விசாரணை நடந்து வருகிறது.

வின்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினரும் மூத்த விஞ்ஞானியுமான ரோதம் நரசிம்மா என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்திய ஆண்ட்ரிக்ஸ் -தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக புகார் மற்றும் விசாரணை ஆகியன தமது மனதை மிகவும் புண்படுத்தியதாகவும், இது போன்ற முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள எதுவுமில்லை என்றும், சுய லாப நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை , விஞ்ஞானிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தமக்கு அவமானமாக இருப்பதால் இந்த

பதவியில் இருந்து விலகுவதாக நரசிம்மா கூறியுள்ளார். இவரது ராஜினாமா மாதவன் நாயருக்கு ஆதரவு தரும் வகையில்உள்ளது.

மிக முக்கியமான விஞ்ஞானி: நரசிம்மா விண்வெளி கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். பி.எஸ்.எல்.வி,. சந்திரயான் உள்ளிட்டவை உருவாக்குவதில் இவருக்கும் முழுப்பங்கு இருந்தது. விண்வெளி மையம் என்றால் ரோதம் நரசிம்மா ஒரு முக்கியஸ்தராக புகழ் பெற்ற பெரும் ஆற்றல் படைத்தவர் ஆவார்.

Friday, February 17, 2012

தமிழக மின்வெட்டு


தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது





சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வரும் 8 மணி நேர அதிகாரப்பூர்வ மின்வெட்டு அளவு 5 மணி நேரமாக குறைக்கப்படவுள்ளது. அதேசமயம், சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டானது, 2 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 8 மணி நேர மின்வெட்டை அதிகாரப்பூர்வமாக மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது. ஆனால் இது பெரும்பாலான மாவட்டங்களில் 9 முதல் 12 மணி நேரம் வரை இருப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.

அதேசமயம், தலைநகர் சென்னையில் மட்டும் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டுமே அமலாகி வருகிறது. இது தமிழகத்தின் இதர பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது மின்வெட்டு பாகுபாட்டை சரி செய்யும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வாதன், மின்வாரிய அதிகாரிகள், தலைமைச் செயலாளர், மின்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சென்னைக்கான மின்வெட்டு அளவை 2 மணி நேரமாக உயர்த்தியும், தமிழகத்தின் இதர பகுதிகளுக்கான மின்வெட்டு அளவை 5 மணி நேரமாக குறைத்தும் அமல்படுத்துவது என்று முடிவாகியுள்ளதாக தெரிகிறது.