Friday, February 24, 2012

முக்கியமான விஞ்ஞானி ராஜினாமா




புதுடில்லி: இஸ்ரோவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியது தமக்கு பெரும் அவமானமாக கருதுவதாக கூறி இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரோ மூலம் விற்கப்படும் எஸ்பாண்ட் அலைக்கற்றை தொடர்பான ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வந்ததன. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக பலக்ககட் விசாரணை நடந்து வருகிறது.

வின்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினரும் மூத்த விஞ்ஞானியுமான ரோதம் நரசிம்மா என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்திய ஆண்ட்ரிக்ஸ் -தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக புகார் மற்றும் விசாரணை ஆகியன தமது மனதை மிகவும் புண்படுத்தியதாகவும், இது போன்ற முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள எதுவுமில்லை என்றும், சுய லாப நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை , விஞ்ஞானிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தமக்கு அவமானமாக இருப்பதால் இந்த

பதவியில் இருந்து விலகுவதாக நரசிம்மா கூறியுள்ளார். இவரது ராஜினாமா மாதவன் நாயருக்கு ஆதரவு தரும் வகையில்உள்ளது.

மிக முக்கியமான விஞ்ஞானி: நரசிம்மா விண்வெளி கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். பி.எஸ்.எல்.வி,. சந்திரயான் உள்ளிட்டவை உருவாக்குவதில் இவருக்கும் முழுப்பங்கு இருந்தது. விண்வெளி மையம் என்றால் ரோதம் நரசிம்மா ஒரு முக்கியஸ்தராக புகழ் பெற்ற பெரும் ஆற்றல் படைத்தவர் ஆவார்.

No comments:

Post a Comment